ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரும் அனைத்து பிரேரணைகளுக்கும் ஆதரவு வழங்க தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளும் வெற்றிப் பெறுமா, அல்லது தோல்வியடையுமா என்பதை குறிப்பிட முடியாது. ஆனால் […]
Tag: நாமல்
பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் நாமல்!
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள இடர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இன்று நேரில் சந்தித்தார். கிளிநொச்சி பாரதிபுரம், பன்னங்கண்டி, கல்லாறு, பாடசாலைகளிலும், தர்மபுரம் பொது நோக்கு மண்டபத்திலும் தங்கியுள்ள மக்களைச் சந்தித்தார். நாமலுடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் வருகை தந்தார்.
ரணிலுக்கு முதலாவதாக வாழ்த்து கூறிய நாமல்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விகரமசிங்க பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார். நாட்டில் நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது முறையாகவும் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ பிரதமராக பதவிப்பிரமாணம் […]
ரஷ்யா சென்ற நாமல்
ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் எதிர்வரும் 18ஆம திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று நாமல் ராஜபக்ஷ ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.





