Tag: தேசியப் பாதுகாப்பு

இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இலங்கையில் ஒரு அங்குலமேனும் வழங்கமாட்டோம்

இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இலங்கையில் ஒரு அங்குலம் நிலபரப்பேனும் வழங்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, அம்பாந்தோட்டை சீனாவின் கடற்படைமுகாமாக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முற்றுமுழுதான பாதுகாப்பு இலங்கையின் கடற்படை வசமானது. சீனர்கள் அம்பாந்தோட்டையில் அத்துமீறினால் என்ன செய்ய முடியும்? என்றும் சிலர் கேட்கின்றனர். […]