யாழ். வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை கைதுசெய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக்காட்டுப் பகுதியில் நேற்றுப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற குழப்ப நிலைக்குக் காரணமான குழுவின் தலைவர் அவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளதாம். அண்மையில், மணல் கடத்தல் சம்பவத்தில் […]





