“எங்கள் வளர்ச்சியை தடுக்கவே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் கூட, எங்கள் சின்னத்தை தெளிவாக பதிவிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்” என சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்ததாவது, “தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-வுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்தே போட்டியிட்டு களம் கண்டதால், நாம் தமிழர் கட்சியின் …
Read More »தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் – தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் காலை 9.50 மணிக்கு அறிவாலயம் வந்தார். அவரை தொடர்ந்து பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் …
Read More »தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 28-ந்தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 28-ந்தேதி காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது என அன்பழகன் தெரிவித்துள்ளார். தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
Read More »அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் – தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்
அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனத்தை கவர்னர் ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவரும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிகளுக்கு திறமை மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, நேர்மையானவர்களும், அப்பழுக் கற்றவர்களும் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் நிரம்பியிருக்க வேண்டிய மிக …
Read More »நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி மொழி எழுதப்பட்டிருப்பதில் திமுக இரட்டை வேட்டை போடுகிறது – மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கண்டனம்
நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி மொழி எழுதப்பட்டிருப்பதில் திமுக இரட்டை வேட்டை போடுகிறது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் முதலில் இந்தி மொழியில் தான் ஊர்ப்பெயர் எழுதப்பட்டிருக்கும். அடுத்து ஆங்கிலம், அதனையடுத்தே தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கும். மத்தியில் பாஜக அரசு வந்த பிறகு தான் இவ்வாறு எழுதப்படுகிறது என்று திமுக குற்றம்சாட்டியது. இதுகுறித்துப் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், …
Read More »தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி – அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் – ஜெ.தீபா பேட்டி
‘தி.மு.க. தான் எங்களுக்கு பிரதான எதிரி’ என்றும், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்களை எதிர்க்கும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்’ என்றும் ஜெ.தீபா கூறினார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி …
Read More »பணம் கொடுப்பதில்தான் வியூகம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆர்.கே. நகரில்பணம் கொடுப்பதில் வியூகம் வகுப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசு, விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை’ என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: டில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் மீது மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. ஆர்.கே. நகரில் பணம் கொடுக்க வியூகம் வகுப்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது. ஆர்.கே. …
Read More »ஆர்.கே.நகர் விவகாரம் ; தேர்தல் அதிகாரியிடம் 31 பேர் நேரில் மனு
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை ஆர்.கே.நகரில் போட்டியிட 55 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். சசிகலா அணியின் டிடிவி …
Read More »அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்!” : துரைமுருகன் நம்பிக்கை
அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்!” : துரைமுருகன் நம்பிக்கை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றும், அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து, தண்டையார்பேட்டை திமுக தேர்தல் பணிமனையில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய …
Read More »சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
சபாநாயகர் மீது தி.மு.க கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி! சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், குரல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து எண்ணிக் கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை, ரகசிய வாக்கெடுப்பாக நடத்தகோரி அன்றைய தினம் திமுக சட்டமன்ற …
Read More »