Tag: தாக்குதல்

பிரான்ஸ் தாக்குதலில் போலீசார் ஒருவர் மரணம்.

சற்றுமுன் பிரான்சில் சேம்ப்ஸ் எலிஸஸ்ல் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் போலீசார் ஒருவர் மரணம்அடைந்ததுடன் மற்றுமொரு போலீசார் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டு நடத்திய தாக்குதலாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.துப்பாக்கிச்சூடு நடந்த நகரை முழுமையாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறப்போகும் சமயத்தில் நடந்த இத்தாக்குதல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத் தாக்குதலைப்பற்றி மேலும் விபரங்கள் அறிய உங்கள் தமிழருவியின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

சிரியாவில் அரசு தரப்பு ராணுவம் நடத்திய வான்வெளி விஷ வாயு தாக்குதல்: 11 குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசு ஆதரவு விமானப்படையின் போர் விமானங்கள் இன்று விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் […]

மந்திகையில் வர்த்தகர் மீது தாக்குதல்

மந்திகையில் வர்த்தகர் மீது தாக்குதல் !

மந்திகையில் வர்த்தகர் மீது தாக்குதல் ! கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மந்திகை துறையாமூலைப் பகுதியில் மூவர் தாக்குதல் நடத்தியதில் காயங்களுக்கு இலக்கான வர்த்தகர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.செந்தில்குமரன் (வயது-32) என்பவரே தாக்குதலுக்குள்ளானவராவார். கடையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வர்த்தகர் மீது மந்திகை துறையாமூலைப் பகுதியில் மூவர் தாக்குதல் […]

ராணுவ ஆஸ்பத்திரிக்குள் - தீவிரவாதிகள்

ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல்

ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்குள் டாக்டர்கள் வேடத்தில் புகுந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய கொலைவெறி தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காபுல் நகரில் 400 படுக்கை வசதியுடன் கூடிய முஹம்மது தாவுத் கான் ராணுவ ஆஸ்பத்திரி வாசலில் இன்று மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ […]

சவூதி அரேபிய மன்னர் மீதான தீவிரவாத தாக்குதல்

சவூதி அரேபிய மன்னர் மீதான தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு – மலேசிய போலீசார் தகவல்

சவூதி அரேபிய மன்னர் மீதான தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிப்பு – மலேசிய போலீசார் தகவல் சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் கடந்த பிப்ரவரி 26ந்தேதி மலேசியா நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அதற்கு சில நாட்களுக்கு முன் மலேசிய அரசு 7 தீவிரவாதிகளை கைது செய்தது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் ஐ.ஜி. காலீத் அபுபக்கர், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மலேசியாவுக்கு வருகை தரும் அரபு நாட்டு மன்னர்களின் […]

இந்தியாவில் பயங்கரவாத இயக்கங்கள் - அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகிறது – தெற்கு ஆசியாவில் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை

இந்தியாவில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகிறது – தெற்கு ஆசியாவில் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை தெற்கு ஆசியாவிற்கு செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண அறிவுரை வழங்கி உள்ள அந்நாட்டு அரசு இந்தியாவில் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தடை விதிப்பு தொடர்பாக டொனால்டு டிரம்ப் உத்தரவில் மாற்றம் தொடர்பான மறு அறிவிப்பு வெளியாகிய நிலையில் இந்நகர்வு ஏற்பட்டு […]

காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர்

காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய ரகசிய தாக்குதல் – 4 பேர் பலி

காஷ்மீரில் கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய ரகசிய தாக்குதல் – 4 பேர் பலி ஸ்ரீநகருக்குத் தெற்கே 60 கி.மீ. தொலைவில் உள்ள முலுசித்ரகாம் பகுதியில், கூட்டு காவல்துறை மற்றும் ராணுவப் படையினர் மீது, தீவிரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகினர். இந்தத் தாக்குதல் வியாழக்கிழமை காலை நடந்துள்ளது. இதில் பலியான நால்வரில் 3 பேர் ராணுவ வீரர்கள். பெண் ஒருவரும் […]

பாகிஸ்தானில் கோர்ட்டு

பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் கோர்ட்டு அருகில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ள மாகாணம் கைபர் பாக்துன்க்வா மாகாணம். இங்கு அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்துவருகின்றனர். இந்நிலையில், தாங்கி நகரில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் இன்று காலை […]

கொலம்பியாவில் எருது சண்டை

கொலம்பியாவில் எருது சண்டையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் காயம்

கொலம்பியாவில் எருது சண்டையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் காயம் கொலம்பியாவில் எருது சண்டையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆப்பிரிக்க நாடான கொலம்பியா தலைநகரில் எருது சண்டை நடந்தது. ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த கடந்த மாதம் தான் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் […]

சோமாலியா மார்க்கெட்டில் நடந்த கார்குண்டு

சோமாலியா மார்க்கெட்டில் நடந்த கார்குண்டு தாக்குதலில் 39 பேர் உடல் சிதறி பலி, 50 பேர் காயம்

சோமாலியா மார்க்கெட்டில் நடந்த கார்குண்டு தாக்குதலில் 39 பேர் உடல் சிதறி பலி, 50 பேர் காயம் சோமாலியா மார்க்கெட்டில் நடந்த கார்குண்டு தாக்குதலில் 39 பேர் உடல் சிதறி பலியாகினர். 50 பேர் காயம் அடைந்தனர். சோமாலியா தலைநகர் மொசாடிசுவில் நகரின் மையப்பகுதியில் மார்க்கெட் உள்ளது. இங்கு அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள். நேற்று அங்கு ஒரு கார் அதிவேகமாக வந்தது. பின்னர் காரில் வந்த நபர் அதில் […]