மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் சட்டசபைக்கும் சரி அரசியல் நிகழ்வுகளிலும் சரி கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கும் கருணாநிதி செல்லவில்லை. அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சரியாக பிராத்தனை செய்வதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். நேற்று தமிழக சட்டசபையில் […]
Tag: தலைவர்
ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 15 நாள் சிறை தண்டனை
ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 15 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷியாவில் ஊழல் மலிந்து விட்டதால், பிரதமர் பதவியில் இருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி சார்பில் ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடைபெற்றது. தலைநகர் மாஸ்கோவில் நடந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி தலைமை தாங்கினார். போராட்டங்களில் ஏராளமானோர் திரளாக கலந்து […]
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து: எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுகிறார்கள் – விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
நடிகர் ரஜினியின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவதாக தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் இலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் விழாவில் பங்கேற்க செல்ல இருந்தார். அவரது இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் கூறினர். […]
மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி
மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். தமிழகத்தில் மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த […]
கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு
கருணாநிதியின் உடல்நலம் குறித்து சோனியா நலம் விசாரிப்பு தி.மு.க., தலைவர், கருணாநிதியின் உடல்நலம் குறித்து, காங்., தலைவர், சோனியா நலம் விசாரித்ததாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க.செயல் தலைவர், ஸ்டாலின் நேற்று, டில்லியில் காங்., தலைவர் சோனியாவை அவர் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது, காங்., துணைத் தலைவர் ராகுலும் உடன் இருந்தார். பின், சென்னைக்கு கிளம்பியபோது, நிருபர்களிடம், ஸ்டாலின் கூறியதாவது: காங்., தலைவர் […]
சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு
சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூவத்தூரில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய சசிகலா எடப்பாடி பழனிச்சாமியின் பெயரை முன் மொழிந்தார். இதையடுத்து அவரை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். முன்னதாக செங்கோட்டையன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் […]
சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) யார்? செங்கோட்டையன் , எடப்பாடி பழனிச்சாமி அல்லது தீபக் – எம்எல்ஏக்களுடன் சசி தீவிர ஆலோசனை
சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) யார்? செங்கோட்டையன் , எடப்பாடி பழனிச்சாமி அல்லது தீபக் – எம்எல்ஏக்களுடன் சசி தீவிர ஆலோசனை சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதையடுத்து சட்டமன்ற கட்சித் தலைவராக (முதல்வர்) செங்கோட்டையன் அல்லது எடப்பாடி பழனிச்சாமி அல்லது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக கூவத்தூர் விடுதியில் தனது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களுடன் […]





