வடக்கினை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணி கால் பதித்துள்ளது. அவ்வகையில் கூட்டமைப்பின் கோட்டை என வர்ணிக்கப்படும் பட்டிருப்புத் தொகுதியிலே முதலாவது மக்கள் சந்திப்பு இன்று நடந்துள்ளது. இச்சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். சந்திப்புக்கள் கிழக்கு மாகாணத்தில் தொடருமென தமிழ் மக்கள் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. […]





