Sunday , April 20 2025
Home / Tag Archives: தமிழீழ விடுதலைப் புலிகள்

Tag Archives: தமிழீழ விடுதலைப் புலிகள்

யாழில் மாவீரர் நாள் நிகழ்விற்கு எதிராக பொலிஸார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்குத் தடை உத்தரவை வழங்குமாறு கோப்பாய் பொலிஸார் மனு நகர்த்தல் பத்திரத்தினைத் தாக்கல் செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு மாவீரர் துயிலும் இல்லம் எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த …

Read More »

விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ..

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரனை விட பாரிய தவறுகளை செய்தவர்கள் பதவியிலிருக்கும் நிலையில் துள்ளும் மீன் இருக்க நெத்தலிக்கு தண்டனையா? என ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் விஜயகலாவிற்கு ராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவியை …

Read More »

விஜயகலாவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

விஜயகலா

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக அரசியலமைப்பின்படி வழக்கு தொடர முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இந்தக் கருத்துக்குப் பின்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூண்டல் இடம்பெற்றிருக்கலாம் என்றும் சரத் என் சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்தவாரம் …

Read More »

விஜயகலாவுக்கு ஆதரவாக கோட்டாபய!

Gotabaya Rajapaksa

சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக வடக்கில் தீவிரமடைந்துள்ள பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் பாவணை ஆகிய சம்பவங்களின் வெளிப்பாடாகவே விஜயகலா மகேஷவரனின் உரை இடம்பெற்றிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருக்கின்றார். இதனால் மைத்ரி – ரணில் தலைமையிலான தரப்பினர் நாட்டின் ஆட்சியை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு …

Read More »

பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவர் விஜேவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் குறித்த நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ருவன் விஜேவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே …

Read More »

சமூகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள்

சமூகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள்

சமூகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் போராளிகள் இன்று சமுகத்தினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். யுத்ததிற்கு முன்னர் பெண் போராளிகளுக்கு காணப்பட்ட மரியாதை யுத்ததின் பின்னர் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு விடியலை நோக்கிய …

Read More »

விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல்

விடுதலைப் புலிகளால்

விடுதலைப் புலிகளால் மஹிந்தவின் உயிருக்கு அச்சுருத்தல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஸ்ரீலங்காவில் மீண்டும் தலைதூக்குவது நிச்சயமே என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படியும் நல்லாட்சி அரசாங்கத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் …

Read More »