தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவொற்றியூரில் மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. முறையாக தேர்தல் நடக்க வேண்டும். இந்திய தேர்தல் …
Read More »சின்னத்தால் சின்னாபின்னமான இரு பிரிவுகள் …மாற்றி மாற்றி மரண கலாய்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுக அம்மா கட்சிக்கும் அல்லது திமுகவுக்கும் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் கூட இவ்வளவு போட்டி இல்லை, ஆனால் அதிமுக அம்மா கட்சிக்கும், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் நடுவே பெரும் ரகளை ஓடிக் கொண்டுள்ளது. ஜெயிக்கிறோமோ இல்லையோ முடிந்த அளவுக்கு ஒரு தரப்பை இன்னொரு தரப்பு அசிங்கப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் தரப்பு …
Read More »மதுசூதனன் வெற்றி உறுதி: ஓ.பி.எஸ்.
ஆர்.கே. நகரில் மதுசூதனன் வெற்றி உறுதியாகி உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டி: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார். தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம். தேர்தலை ஆணையம் முறையாக நடத்த வேண்டும். இரட்டை மின்விளக்கில் ஒரு விளக்கு எம்ஜிஆர். மற்றொன்று ஜெயலலிதா. …
Read More »உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி
உச்சங்கிளையில் ஊசலாடும் உட்கட்சி பிரிவுகள் !! சின்னம் யாருக்கு… விசாரணையில் இழுபறி இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்துள்ளன. அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமாக இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் முயற்சியில் இரு அணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுகவின் இருதரப்பும் தங்களுக்கே இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று …
Read More »சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை
சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் 29-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பிறகு அவர் 31-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல்- …
Read More »முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வரும் வரை போராட்டம் தொடரும் – ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் மர்மங்களும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் திரளாக கலந்துகொண்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே …
Read More »ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை தாக்கல்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் அறிக்கை தாக்கல் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தமிழக அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் 5 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் வந்து சிகிச்சை அளித்தனர். அவர்கள் அளித்த சிகிச்சைகள் பற்றி தமிழக அரசு அறிக்கை கேட்டு இருந்தது. அதை ஏற்று டெல்லி …
Read More »பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிப்பு
பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிப்பு ரூ.2 கோடி பரிசுப் பொருள் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் மீதான வழக்கு கோடை விடுமுறைக்கு பின் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா 1991-1996-ம் ஆண்டுகளில் பதவி வகித்தார். 1992-ம் ஆண்டு அவர் தன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் …
Read More »ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் – பன்னீர்செல்வம் உறுதி
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் – பன்னீர்செல்வம் உறுதி ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தீரும் வரை போராட்டம் தொடரும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். குழப்பம்: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., அணியினர் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது: ஜெயலலிதா மறைந்த பின்னர் கட்சியையும் ஆட்சியையும் உங்களால் தான் காப்பாற்ற முடியும் என சசிகலா கூறினார். ஆனால் சசிகலாவை …
Read More »ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – நடிகர் ராதாரவி
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் – நடிகர் ராதாரவி ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் வந்துள்ளதால் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நடிகர் ராதாரவி கூறினார். வாணியம்பாடியில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் …
Read More »