படையினருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பால் கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. எனவே, இலங்கையின் சமகாலப்போக்கு, ஜெனிவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு காட்டும் ஆர்வம் தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் இவ்வாரம் கூடவுள்ளனர் எனப் பெயர்க் குறிப்பிட விரும்பாத மேற்குலகின் மூத்த இராஜதந்திரியொருவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டுவிழா ஜனாதிபதி …
Read More »எந்த இராணுவத் தளபதியின் மீதும் கைவைக்க இடமளியேன்! – சு.க.மாநாட்டில் மைத்திரி சூளுரை
போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் மீதோ அல்லது எந்தவொரு இராணுவத் தளபதியின் மீதோ அல்லது நாட்டின் எந்தவொரு இராணுவச் சிப்பாய் மீதோ கைவைக்க எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அத்துடன், புலிச்சார்பு அமைப்புகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அதன் நிழலாகச் செயற்படும் அரசசார்பற்ற அமைப்புகளின் தாளத்திற்கேற்ப தான் ஆடமாட்டார் எனவும் அவர் இடித்துரைத்தார். கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் …
Read More »ஜகத் ஜயசூரிய போர்க்குற்றவாளி! ஆதாரங்கள் என் வசம்; தண்டனை அவசியம்!! – பொன்சேகா வலியுறுத்து
“போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தினரை கட்டாயம் தண்டிக்கவேண்டும். இராணுவ உடை அணிந்ததற்காக குற்றமிழைத்தவருக்கு தண்டனை வழங்காது இருக்கமுடியாது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பிலான சான்றுகள் என்னிடம் உள்ளன. உரிய நீதி விசாரணை ஆரம்பிக்கப்பட்டால் அங்கு சாட்சியங்களை சமர்ப்பிக்க நான் தயாராகவுள்ளேன்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிராந்திய அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் …
Read More »உள்நாட்டில் நம்பிக்கை இழந்ததால்தான் வெளிநாட்டில் வழக்கு! – ஜகத் ஜயசூரிய விவகாரம் குறித்து சுமந்திரன் கருத்து
“பொறுப்புக்கூறல் விவகாரம் தொடர்பில் உள்நாட்டில் நீதி நியாயம் கிடைப்பதில் நம்பிக்கையின்மை ஏற்பட்டதால்தான் நமது மக்கள் வெளிநாடுகளில் வழக்குப் போடும் நிலைமை வந்திருக்கின்றது.” – இவ்வாறு கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ.சுமந்திரன். போரின் இறுதிக் கட்டத்தில் வன்னித் தளபதியாக இருந்தவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஜகத் ஜயசூரிய, தற்போது பிரேஸில் மற்றும் அதைச் சூழ்ந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராக …
Read More »