மத்திய வங்கியின் முறிகள் விநியோகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிற்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை, அரசாங்கத்தில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அமைச்சர் ரவியை பதவி நீக்குவது அல்லது உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறாறில்லாவிட்டால், அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க …
Read More »பெற்றோலிய தொழிற்சங்க வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது!
ஜனாதிபதியுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளமையை அடுத்து வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருக்க பெற்றோலிய தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இதேவேளை, தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டும் விடயங்கள் தொடர்பில் சீன நிறுவனத்துடன் கலந்தாலோசித்து குறித்த ஒப்பந்தத்தில் சேர்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
Read More »சவூதி மன்னர் இலங்கைக்கு திடீர் விஜயம்
சவூதி மன்னர் அப்துல் அஸீஸ் இலங்கைக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் காலை 11.20 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக வெளிவிவாகர அமைச்சின் தகவல் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இவரின் இந்த விஜயத்தில், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது அறிய முடிகிறது. முதல் சந்திப்பு இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் இடம்பெறவுள்ளது. இன்று இரவு …
Read More »பிரான்ஸ் தாக்குதலில் போலீசார் ஒருவர் மரணம்.
சற்றுமுன் பிரான்சில் சேம்ப்ஸ் எலிஸஸ்ல் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் போலீசார் ஒருவர் மரணம்அடைந்ததுடன் மற்றுமொரு போலீசார் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டு நடத்திய தாக்குதலாளியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.துப்பாக்கிச்சூடு நடந்த நகரை முழுமையாக போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறப்போகும் சமயத்தில் நடந்த இத்தாக்குதல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத் தாக்குதலைப்பற்றி மேலும் விபரங்கள் அறிய உங்கள் தமிழருவியின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
Read More »தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை: ஏற்றுக்கொண்டார் ஜனாதிபதி மைத்திரி
படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கும், விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னரே உத்தரவிட்டிருந்த போதிலும் இதுவரையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை மனவருத்தத்துடன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார். இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியை …
Read More »வில்பத்துக்கு வடக்கே உள்ள காணிகள் பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம் : ஜனாதிபதி கையொப்பம்
வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள 04 பாதுகாக்கப்பட்ட வனங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய அனைத்து வனப்பகுதிகளும் இணைக்கப்பட்டு தனியான பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் …
Read More »இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தப்பா
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தப்பா இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. அதன் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தையும், சர்வதேச நீதிபதிகளையும் சு.க. நிராகரிப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தப்பா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் அரசின் வெளிவிவகாரக் கொள்கை நாட்டுக்குப் பாதகமாக …
Read More »ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்னை வருகை
ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்னை வருகை ராணுவ விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் ராணுவ விருது வழங்கும் விழா வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் …
Read More »நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள சரியான தருணம் – பிரணாப் முகர்ஜி
நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள சரியான தருணம் – பிரணாப் முகர்ஜி நீதித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இதுவே சரியான தருணம்’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். சரியான தருணம்: டில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: நம் நாட்டில் ஒவ்வொரு துறையும் காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை மேம்படுத்தி வருகிறது. நீதித்துறையிலும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நீதித்துறையில் சீர்திருத்தம் …
Read More »நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் ஸ்டாலின்
நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் – ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் ஸ்டாலின் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று (பிப்., 23) மாலை சந்திக்க உள்ளார். நேரில் வலியுறுத்தல்: தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை எதிர்கட்சி தலைவர் …
Read More »