ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த அக்கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறுபான்மையின மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள் என்பதால், மைத்திரிபால சிறிசேனவை போட்டியில் நிறுத்த மஹிந்த ராஜபக்ஷ விரும்புவதாக …
Read More »ஜனாதிபதியின் நிகழ்வுக்கு துப்பாக்கி ரவைகளுடன் வந்தவர் கைது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் சிறிபுறவில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் துப்பாக்கி ரவைகள் சிலவற்றை பணம் வைக்கும் பேர்ஸ் ஒன்றில் எடுத்து வந்திருந்த ஒருவர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Read More »ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் ஐ.தே.க!
தேசிய அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லையென்றால் ஐ.தே.க உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் வெளியாகும் சிங்கள வார பத்திரிக்கையொன்றே மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கம் அமைக்கும் விடயத்தில் ஜனாதிபதி எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்வதன் ஊடாக அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐ.தே.க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அப்பத்திரிக்கை செய்தி …
Read More »ஜனாதிபதியின் கருத்தை விமர்சிக்க சபாநாயகருக்கு உரிமை இல்லை!
ஜனாதிபதியின் செயற்பாடுகளை சபாநாயகர் விமர்சிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வார இறுதி பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியினால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினருக்கும் விமர்சனங்களை வெளியிட அதிகாரம் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், சபாநாயகர் என்ற பதவியை வகிக்கும் கரு ஜயசூரிய, ஜனாதிபதியை விமர்சனம் செய்ய முடியாது எனவும் …
Read More »ஜனாதிபதியால் காவற்துறையில் நிகழவிருக்கும் அதிரடி மாற்றம்
இலங்கையில் நலனுக்காக அடுத்த சில மாதங்களில் காவற்துறை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
Read More »மைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரை நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவின் பிரகாரம் இந்த ஆணைக்குழு இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவிற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்தோடு சரோஜினி வீரவர்தன, …
Read More »ஜனாதிபதி வேட்பாளராக ரணில் களமிறங்க போகிறாரா?
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பொதுவேட்பாளரைக் களமிறக்காது என தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க எதிர்ப்பார்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும், அந்த நேரத்தில் பொறுத்தமான வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாம் எங்கள் கட்சியின் தலைவர் ரணில் …
Read More »ஜனாதிபதி வருமா ஆப்பு
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை ஒழிக்க மக்கள் விடுதலை முன்னணி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற அமர்விலேயே குறித்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்திருந்தார். மேலும் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி விடயங்களை கருத்திற்கொண்டே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்து செய்ய வேண்டிய அவசியத்தையும் அவர் தெளிவுபடுத்தினார். அத்தோடு …
Read More »ஜனாதிபதி பதவி விலக போகிறாரா?
ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங் அவர்களுக்கு சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் மைத்திரி சில நாட்களுக்கு முன் ரணில் மீண்டும் பிரதமராக பதவியேற்றால் நான் ஒரு மணி நேரத்திலே பதவி ராஜினாமா செய்வேன் என மைத்திரி அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது ரணில் பதவி பிரமாணம் இவர் முன்னிலையிலே நிறைவேறியுள்ளது ஆனால் அவர் எந்தவித …
Read More »நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடி ஜனாதிபதி தேர்தலிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்பேட்டியொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலிற்கு ஏற்ப நான் செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதா இல்லையா என்பது குறித்து நானே தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ள சிறிசேன எனக்கு அவ்வாறான எண்ணம் எதுவும் இல்லை நான் ஏனையவர்களின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ள தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார். இரண்டாவது தடைவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு …
Read More »