மொழியினால் நாட்டு மக்கள் பிளவுபட்டிருப்பது நாட்டின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு தடையாக உள்ளது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதனை கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். அனைத்து இன, மத பிரிவினர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் ஊடாக […]
Tag: ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
மைத்திரியும் – மஹிந்தவும் முதன் முறையாக ஒன்றாக
ஜனாதிபதியும் பிரதமரும் திஸ்ஸமஹாராம விகாரையில் சமய கிரியைகளில் ஈடுபட்டனர். தேசிய ஏர்பூட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திஸ்ஸமஹாராம சந்தகிரிகொட வயல்வெளியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திஸ்ஸமஹாராம விகாரைக்குச் சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டனர். திஸ்ஸமஹாராம ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் […]
மீண்டும் பரபரப்பில் இலங்கை அரசியல்
ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். அதைப் போலவே இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக அறிவித்தார். நாடாளுமன்றம் நவம்பர் 16-வரை ஒத்திவைத்துள்ளனர். இதனிடையே நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து வர்த்தமாணி அறிவிப்பு […]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர் ஒருவரும், மாவட்ட அமைப்பாளர் ஒருவரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து இவர்கள் தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிஹிந்தலை தொகுதி அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சரத் இலங்க சிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுர மாவட்ட அமைப்பாளராக வடமேல் மாகாணசபை அமைச்சர் சுசில் […]
தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
87 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தமன்கடுவ பிரதேச செயலகத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் மக்களிடம் கையளிக்கப்பட்டது. மூன்று மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தின் மேல் மாடியில் 350 பேர் அமரக்கூடிய வகையிலும், வெளிக்கள உத்தியோகத்தர் பிரிவு மற்றும் சமூக அபிவிருத்தி பிரிவு என்பனவும் நிறுவப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் மின்னேரியா, மெதிரிகிரிய. ஹபரண, ஹிங்குராங்கொட ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கும், […]
மீத்தொட்டமுல்ல அனர்த்தம் ஜப்பானிய நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு
மீத்தொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகைதந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதிநிதிகள் குழுவின் தலைவரான ஆவைளரவயமந ரேஅயாயவய அவர்கள் அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் […]
நில மீட்புப் போராட்ட மன்னார் மக்களுக்கு சர்வமதத் தலைவர்கள் ஆதரவு
மன்னாரில் நில மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மறிச்சுக்கட்டி மற்றும் முள்ளிக்குளம் மக்களுக்கு இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள் நேரில் சென்று தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு மன்னார் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளையும் தேசிய உலமா சபையின் தலைவர்களும் தலைமை தாங்கியுள்ளனர். ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வில்பத்து சரணாலயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி மன்னார் […]
நல்லிணக்கம் ஆன்மீக தலைவர்களின் முக்கிய பணியாக வேண்டும்- ஜனாதிபதி
நல்லிணக்கத்தைப் பலப்படுத்தி அனைத்து சமய தத்துவங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களின் மனங்களை இணைக்கும் பணியின் உண்மையான தூதுவர்களாக இருப்பவர்கள் ஆன்மீக தலைவர்களாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் திரிபிடகம், விவிலியம்,அல்குர்ஆன் மற்றும் பகவத் கீதையில் நாம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்திற்கு வழிகாட்டப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,பௌத்த பிக்குகள், இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமயத் தலைவர்களுக்கு இதனை சமூகத்தில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். நேற்று தங்கொடுவை சிங்கக்குளியில் நடைபெற்ற […]
வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம் தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு
வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசாங்கம் தண்ணீர் பௌசர்கள் அன்பளிப்பு வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கு தேவையான குடிநீர் விநியோகத்துக்காக இந்திய அரசாங்கத்தினால் தண்ணீர் பௌசர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்தினால் 08 தண்ணீர் பௌசர்கள் குறித்த தண்ணீர் பௌசர்களுக்கான ஆவணங்கள் மற்றும் சாவிகள் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டன. 16 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறட்சி காரணமாக […]





