Tag: ஜகத் ஜயசூரிய

ஜகத் ஜயசூரியவால் விசாரணை வலைக்குள் சிக்கியது பிரேஸில் அரசு!

போர்க்குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு நியமனம் வழங்கிய தவறுக்காக பிரேஸில் அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை வலைக்குள் சிக்கியிருப்பதாக அறியமுடிகின்றது. முன்னாள் தளபதி ஜகத் ஜயசூரியவை இலங்கைக்கான தூதுவராக நியமித்ததன் மூலம் போர்க்குற்றவாளி ஒருவருக்கு இராஜதந்திர சிறப்புரிமைக்குள் நியமனத்தை வழங்கி பிரேஸில் அரசு தவறிழைத்திருப்பதாக தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் […]

கோத்தபாய

எதற்கும் அஞ்சாதீர்! – ஜகத்துக்கு ஆறுதல் கூறிய கோட்டா

“எதற்கும் அஞ்சவேண்டாம். போர்க்குற்ற விசாரணைக்கு முகங்கொடுக்கவேண்டிவரின் உங்களுடன் நான் இருப்பேன்.” – இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு ஆறுதல் கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ. பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக செயற்பட்ட ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேஸில் நீதிமன்றில் போர்க்குற்ற விசாரணை வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஜகத் ஜயசூரியவுக்குச் சார்பாக பலரும் ஆதரவுக்குரல் எழுப்பிவருகின்றனர். அவர் மீது கைவைக்க இடமளிக்கமாட்டார் என […]

கொலையாளியே விசாரணை நடத்துவதா? சர்வதேச விசாரணை

ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உடன் விசாரணை அவசியம்! – கூட்டமைப்பு வலியுறுத்து 

போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக உரிய விசாரணை உடன் அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “போரின்போது இடம்பெற்ற போர்க்ககுற்றங்கள் தொடர்பில் உரிய நீதி விசாரணை நடத்தப்படும் என்று […]

குப்பையைக் கிளறாதீர்! – பொன்சேகா மீது சம்பிக்க பாய்ச்சல்

“போர்க்குற்றங்கள் தொடர்பில் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது ஒரு விரலை நீட்டினால் மீதி நான்கு விரல்களும் தன் பக்கம்தான் திரும்பியுள்ளன என்பதை சரத் பொன்சேகா மறந்துவிடக்கூடாது.” – இவ்வாறு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் காட்டமாகத் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க. அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “இராணுவத்தினர் மட்டுமா போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்? விடுதலைப்புலிகள் அமைப்பின் நெடியவன், […]

ஜகத் ஜயசூரியவைக் கைதுசெய்தால் முன்னாள் போராளிகளை சிறைபிடிப்போம்! – மிரட்டுகிறார் சம்பிக்க

போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமானால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் கைதுசெய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கட்டளைத் தளபதியாக […]

ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பாதுகாக்க வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்காக இலங்கை அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜகத் ஜயசூரிய நாட்டின் பாதுகாப்புக்காகவே வன்னி பிராந்திய கட்டளை தளபதியாக கடமையாற்றினார், அது சட்ட ரீதியானது. நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த அவர பங்களிப்பு கிடைத்தது. […]

ஜகத் ஜயசூரியவை கைது செய்ய சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும்! பிரித்தானியா விடுத்த கோரிக்கை

பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டு வழக்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும் என பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான, போல் ஸ்கலி இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “பிரேசிலுக்கான இலங்கை தூதுவர் ஜகத் ஜயசூரியவை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் சிவப்பு […]

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள் - ஜகத் ஜயசூரியவை

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள்: – ஜகத் ஜயசூரியவை கைதுசெய்யக் கோரிக்கை

ஜோசப் படை முகாமில் சித்திரவதைகள்: – ஜகத் ஜயசூரியவை கைதுசெய்யக் கோரிக்கை “வவுனியா ஜோசப் முகாமில் பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு தெளிவான – உறுதியான ஆதாரங்கள் போதியளவு உள்ளன. இந்த முகாமின் பொறுப்பாளராகப் பணியாற்றிய இப்போதைய பிரேஸில் தூதுவர் ஜகத் ஜயசூரியவை விசாரணை செய்ய வேண்டும்.” – இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கோரியுள்ளது. இது தொடர்பில் அந்த நிறுவனத்தின் தலைமைப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள […]