Tuesday , August 26 2025
Home / Tag Archives: சைட்டம்

Tag Archives: சைட்டம்

கொழும்புக்கு இன்று வருகிறது சைட்டம் எதிர்ப்புப் பேரணி! – கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம்

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் நாடளாவிய ரீதியில் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுத்துவரும் பேரணி இன்று கொழும்பை நோக்கி வரவுள்ளது. கண்டியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான  மாணவர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நாட்டின்  பல்வேறு நகரங்களிலிருந்தும் இன்று கொழும்பை வந்தடையும் வகையில் பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் கொழும்பில் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டத்துக்கு 100இற்கும் அதிகமான …

Read More »

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் வைத்திய கல்லூரியை பொதுவுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளது. இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும். மாலபே தனியார் வைத்திய கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக கடந்த மாதம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தது. எனினும், இம்மாத ஆரம்பத்தில் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக அரச …

Read More »

தேசிய அரசை ஆட்டங்காண வைக்க இடமளியோம்! – ஐ.தே.க. தெரிவிப்பு 

“தேசிய அரசை ஸ்திரமற்ற நிலைமைக்குக் கொண்டுசெல்ல எந்தவகையிலும் இடமளிக்கப்போவதில்லை”  என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “தேசிய அரசைக் கவிழ்க்கப்போவதாக எண்ணிக்கொண்டு அரசிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம் பக்கம் இழுத்துக்கொள்ளும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆப்பிழுத்த குரங்குக்கு நேர்ந்த கதியே நேரும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய அரசிலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கத் தயாராகிவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. …

Read More »

வைத்தியர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு நாளை கூடுகிறது

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை அரசுடமையாக்குமாறு கோரி முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் முகமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு இன்று கூடுகிறது. கடந்தவாரம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவிருந்த வைத்தியர் சங்கம் போராட்டத்தை கைவிட்ட நிலையில் மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து ஆராய இன்று அச்சங்கம் கூடுகிறது.

Read More »

மாணவர்களின் பேரணி மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் அதி உயர் வலுகொண்ட நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் பேரணி ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்வதற்கு முற்பட்ட போது, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நீடித்த சர்ச்சை காரணமாக, குறித்த கல்லூரியை அரசாங்கம் …

Read More »

5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டம் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

சைட்டம் தனியார் மருத்துவமனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 5ஆம் திகதி பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு அரசின் பிரதான ஐந்து தொழிற்சங்கங்கள் ஆதரவுத் தெரிவித்துள்ளன.

Read More »

ரணிலின் கார்களின் பெறுமதி 6000 இலட்சங்கள்: மைத்திரியின் கூட்டத்திற்கான செலவு 96 இலட்சம்

ரணிலின் கார்களின் பெறுமதி

ரணிலின் கார்களின் பெறுமதி 6000 இலட்சங்கள்: மைத்திரியின் கூட்டத்திற்கான செலவு 96 இலட்சம் கல்வியை விரிவுபடுத்துவதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாக அரசாங்கம் கூறும் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க சைட்டம் தொடர்பில் ஜனாதிபதியால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை வழங்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று சைட்டம் கல்வி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தி ஜே.வி.பி ஆரப்பாட்டப் பேரணி ஒன்றையும் …

Read More »

சைட்டம் பல்கலையை நிராகரிக்க மருத்துவப் பேரவை யார்?

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

சைட்டம் பல்கலையை நிராகரிக்க மருத்துவப் பேரவை யார்? எந்தவித அடிப்படை காரணங்களும் இன்றியே மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டப்பட்டிப்பினை ஏற்பதற்கு ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவை சிலருடன் சேர்ந்து நிராகரித்து வந்ததாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அரச வைத்தியசாலைகளில் மாலம்பே பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சிபெற அனுமதியளிக்காமல் அந்த மாணவர்களை மருத்துவர்களாக ஏற்றுக்கொள்ள தகுதியில்லை என்று மருத்துவப் பேரவை கூறுவது பிழையான செயற்பாடாகும் என்றும் அமைச்சர் கண்டித்தார். …

Read More »