தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இலங்கை வந்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை இரண்டாவது தடவையாக நேற்றும் சந்தித்துக் கலந்துரையாடினர். கொழும்பில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இரவு …
Read More »நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை அரசுக்கு அழுத்தம் தொடரும்! – இலங்கைத் தமிழரை இந்தியா கைவிடாது என சம்பந்தனிடம் சுஷ்மா உறுதி
“இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வே இந்த நிலைமையை ஏற்படுத்தும். எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ். “இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது” எனவும் வாக்குறுதியளித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய இந்தியப் …
Read More »இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து கடும் வேதனையில் இந்தியா! – சுஷ்மா அதிரடி
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு கடும் வேதனையும் துயரமும் அடைந்தது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்தக் கருத்து வழமைக்கு மாறானது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இந்தியா இதுவரை வெளியிட்ட கருத்துக்களில் இதுவே கடுமையானது என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் …
Read More »