சிறந்ததோர் அமைச்சர் வாரியத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் தங்கம்மா முதியோர் இல்லம் கலாநிதி முருகர் குணசிங்கத்தால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்விலும், ‘இலங்கைத் தமிழர்’ நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2013ஆம் ஆண்டு வடக்கு …
Read More »வடக்கில் வன்முறைகளுக்கு மொழிப்பிரச்சினையே காரணம்: விக்னேஸ்வரன்
வடக்கில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களுக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைக் காலங்களில் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக யாழில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் மொழிப்பிரச்சினை காரணமாகவே இடம்பெற்றுள்ளன. …
Read More »வடக்கு இளைஞர்களின் செயற்பாடுகள் வேதனையளிக்கின்றன: விக்னேஸ்வரன்
வடக்கில் தற்போதைய இளைய தலைமுறையினரின் செயற்பாடுகள் வேதனையளிப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டி பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு இளைஞர்களின் சீரழிவிற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற பண உதவிகள் முறையற்ற விதத்தில் செலவு செய்யப்படுவதே பிரதான காரணமாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் வடக்கில் மாணவர்கள் …
Read More »வடக்கு முதலமைச்சர் விடாப்பிடி! அமைச்சரவை விரைவில் மாறும்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை விரைவில் முழுமையாக மாற்றியமைப்பதில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியாக இருக்கின்றார். அமைச்சரவையைப் பற்றிய முடிவுகளில் எவரது தலையீடுமின்றி முடிவெடுக்கும் உரிமை தனக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது கூட்டத்தில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். “அமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறும். அது பகுதியாகவா, முழுமையாகவா என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யப்படவில்லை” என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சர் …
Read More »வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடும்
வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில, புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் சுயாட்சி ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் தனித்துவம் அற்றுப்போய்விடும் என அவர் …
Read More »அரசியல் கைதிகள் விவகாரம்: சட்டமா அதிபருடன் முதல்வா் சந்திப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சட்டமா அதிபருடன் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துரையாடவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தாரிடம் வடக்கு முதல்வர் இதனை தெரிவித்துள்ளதோடு, அவர்களை விடுவிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் பலர், எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …
Read More »சம்பந்தன் – விக்கி சந்திப்பு! – கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான பேச்சின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எனத் தீர்மானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன், ஊழல், மோசடிகள் குறித்து தெரிவுக்குழு அமைக்கப்படவேண்டும் எனக் …
Read More »சம்பந்தன் – விக்கி இவ்வார இறுதியில் கொழும்பில் சந்திப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு இந்த வார இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் கொழும்பில் இருவரும் சந்தித்துப் பேசுவர் என அறியமுடிகின்றது முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பில் நிற்பார் எனக் கூறப்படுகின்றது. அந்தவேளையில், பெரும்பாலும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று கொழும்பு இசுப்பத்தான வீதியிலுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் இல்லத்தில் இந்தச் …
Read More »டெனீஸ்வரனைப் பதவி நீக்க ரெலோவோ, வடக்கு முதல்வரோ என்னுடன் ஆலோசிக்கவில்லை! – சம்பந்தன் தெரிவிப்பு
“வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனைப் பதவிநீக்குவதற்கான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ரெலோவோ அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரோ என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ரெலோ அமைப்பு வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் கடந்த 13ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தது. தமது கட்சி சார்பான தங்கள் அமைச்சரவையிலுள்ள பா.டெனீஸ்வரனை …
Read More »வடக்கு அமைச்சர் டெனீஸை நீக்க முதல்வர் முடிவு! – நடவடிக்கை எடுப்பேன் என்று ரெலோவுக்கு அவர் அறிவிப்பு
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கோரிக்கையின் பிரகாரம் பதவி நீக்கம் செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரை பதவி நீக்கியதால் தோன்றிய சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ந.சிறீக்காந்தாவினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்குக் …
Read More »