“தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குத் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடையவேண்டும்” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவுசெய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது 40 வருடகால நாடாளுமன்ற …
Read More »மீண்டும் ரணில் தலைமையில் நாளை கூடுகின்றது அரசமைப்பு வழிகாட்டல் குழு!
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்து பின்னர் ஒத்திவைக்கப்பட்ட அரசமைப்புப் பேரவையின் வழிகாட்டல் குழுவின் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையை எப்படியாயினும் இந்த மாத முடிவுக்கு முன்னர் இறுதிசெய்து பூர்த்தியாக்கிவிடவேண்டும் என்பதில் உறுதியாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதன் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் சமயம் என்று பார்க்காமல் வழிகாட்டல் குழுவின் …
Read More »இன்று புதுடெல்லி செல்கிறார் சிறிலங்கா பிரதமர்- நாளை மோடி, சோனியாவை சந்திக்கிறார்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து நாட்கள் பணிநோக்குப் பயணமாக இன்று இந்தியா செல்லவுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் அவர் புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்கா பிரதமருடன், அவரது துணைவி மைத்ரி விக்கிரமசிங்க …
Read More »