ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் மே தினம் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
Read More »கூட்டு அரசாங்கத்துக்குள் பிளவு – ஒட்டவைப்பதற்கு மைத்திரி தீவிர முயற்சி
பங்களாதேஷ் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூட்டு அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய- சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். பங்களாதேசுக்குப் புறப்படுவதற்கு முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர், இந்த ஆண்டில் நடத்தப்படும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி …
Read More »எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்க முடிவு செய்யவில்லை
திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நடக்காத ஒன்றைப் பற்றி கற்பனையாகச் சிந்தித்து தொழிற்சங்கங்கள் செயற்படுகின்றன. அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு சுதந்திரக்கட்சி ஒருபோதும் …
Read More »