யாழ். வடமராட்சியில் பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவமொன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி துன்னாலை மத்தி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையில், நேற்று உரப்பை ஒன்றை நாய் கடித்து குதறிக்கொண்டிருந்ததை அவதானித்த பாதசாரிகள், உடனடியாக நெல்லியடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லியடி பொலிஸார், குறித்த உரப்பையினை சோதனையிட்டபோது, அதனுள் சிசு ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அத்தோடு சிசுவின் கை காயங்களுக்கு உள்ளாகியிருந்துள்ளது. …
Read More »