த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஏழை, எளிய நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சர்க்கரையின் விலையை தமிழக அரசு உயர்த்தியிருப்பது கண்டிக்கதக்கது. வருகிற நவம்பர் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை ரூ.13.50 வில் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இது ஏழை எளிய நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். அன்றாடம் […]





