இலங்கை அரசை ஒருபோதும் தப்பவிடக்கூடாது! சம்பந்தன் இலங்கை அரசானது சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதிலிருந்து இலங்கை அரசை சர்வதேசம் தப்பவிடக்கூடாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தன்னைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நிர்வாக இயக்குநர் பவோலா பம்பலோனி தலைமையிலான குழுவினரிடமே மேற்படி வலியுறுத்தலை சம்பந்தன் விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது கடந்த […]
Tag: சம்பந்தன்
மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது – சம்பந்தன் தெரிவிப்பு
மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது – சம்பந்தன் தெரிவிப்பு தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கவே கடந்த காலங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன, அந்த உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷவிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தை பாதிக்காமல் செயற்பட கூடிய ஒருவரை தெரிவு தெரிய வேண்டும் என […]
வெற்றி பெற்ற மோடிக்கு சம்பந்தன் கடிதம்
இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்கும், நரேந்திர மோடியுடன் மிகவும் நெருங்கமாகச் செயலாற்றி, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண, ஆவலாக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது முறையாகவும், பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். அவருக்கு, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். […]
சற்று முன் வெளியான அறிவிப்பால் பேரதிர்ச்சியில் சம்பந்தன்
எதிர்க்கட்சித் தலைவராக குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவே தொடர்வார் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை அவர் சற்றுமுன்னர் கட்சித் தலைவர்களுக்கு அவர் விடுத்துள்ளார். அத்துடன் எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளராக மஹிந்த அமரவீர செயற்படுவார் என்றும் அவர் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால் எதிர்க்கட்சித் தலைவர் யாருக்கு என்ற இழுபறி நிலை தொடர்ந்துவந்தது. நாடாளுமன்ற அங்கீகாரமற்ற கட்சியொன்றின் உறுப்புரிமை கொண்ட […]
மகிந்த அணியினரால் சம்பந்தன் கட்சிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!
இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கபடவுள்ளது.மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இவ்வாறு எச்சரித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். “இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.ஆனால் அதனை […]
சம்பந்தன் பதவி அந்தரத்தில்? அடுத்தது யார்?
பாராளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளதுடன் இன்றைய தினம் பொதுமக்கள் பார்வையாளர் கலரி மற்றும் சபாநாயகர் விசேட விருந்தினர் கலரி என்பவற்றைத் திறப்பதற்கு நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்ர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாதக் காரணத்தினால் பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைய, ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் […]
வீடு திரும்பினார் சம்பந்தன்!!
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிகிச்சையின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளார். தனியார் வைத்தியசாலையில் கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
வைரலாக பரவும் சம்பந்தன் – மைத்திரி ஆவணம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஒரு ஆவணப் பிரதியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால், அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியிருந்தனர். இந் நிலையில் ஐக்கிய […]
எழுத்து மூல உத்தரவாதத்திலிருந்து பின்வாங்குகிறார் சம்பந்தன்?
ஐக்கிய தேசிய முன்னணியுடன் எழுத்துமூல உடன்படிக்கை செய்யப்பட்ட பின்னரே, ஆதரவளிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தார். இதையடுத்தே, கூட்டமைப்பின் எம்.பிக்கள், ஐ.தே.முன்னணி பிரேரிக்கும் பிரதமரை ஆதரிப்பதாக கையொப்பமிட்டனர். கிட்டத்தட்ட அந்த கையெழுத்து, வெற்றுத்தாளில் இடப்பட்ட கையெழுத்தாக அமைந்து விட்டதா என்ற சந்தேகம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலரிடம் ஏற்பட்டு விட்டது. எழுத்துமூல உத்தரவாத நிலைப்பாட்டில் இருந்து கூட்டமைப்பின் தலைமை […]
அரசியல் நெருக்கடி குறித்து சம்பந்தன் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின் […]





