மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் சட்டசபைக்கும் சரி அரசியல் நிகழ்வுகளிலும் சரி கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கும் கருணாநிதி செல்லவில்லை. அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சரியாக பிராத்தனை செய்வதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். நேற்று தமிழக சட்டசபையில் […]
Tag: சட்டப்பேரவை
மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி
மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி தமிழக சட்டப்பேரவையை கலைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். தமிழகத்தில் மக்களாட்சியை அமல்படுத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த […]
சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை – பாமக நிறுவனர் ராமதாஸ்
சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை – பாமக நிறுவனர் ராமதாஸ் சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்காக இன்று கூடிய சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவையாகும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்த செயல், அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த வாக்காளப் […]
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டது தமிழகத்தின் பிரச்சினை – ராமதாஸ்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டது தமிழகத்தின் பிரச்சினை – ராமதாஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு தருணங்களில் அவமதிக்கப்பட்டிருப்பதை தமிழக நலன் சார்ந்த சிக்கலாகவே பார்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் திடீர் அரசியல் மாற்றமாக அதிமுக தலைமைக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலகக்கொடி உயர்த்தியுள்ளார். இதை அதிமுகவின் உட்கட்சி பிரச்சினை […]





