படுகொலைகள் மற்றும் கடத்தல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரணாகவே வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தினார் என்று சபையில் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக்கொள்வதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன், கோட்டாபயவின் புதல்வர், மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஆகியோர் தொடர்பிலும் அவர் தகவல்களை …
Read More »