இலங்கையில் மீண்டும் கொரோனா – 1,317 தொற்றாளர்கள் ஆக அதிகரிப்பு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதுவரை மொத்தமாக 1,317 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 135 பேர் இனங்காணப்பட்டனர். இன்று இனங்காணப்பட்ட 135 நோயாளர்களில் 127 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தோர் எனவும், 8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் எனவும் அரசாங்கத் …
Read More »கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த வயோதிபர் உயிரிழப்பு
கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்த வயோதிபர் உயிரிழப்பு முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த வயோதிபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். திடீரென அவருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டபோது உயிரிழந்துள்ளார் குறித்த வயோதிபர் உயிரிழந்தமைக்காண காரணங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளமையும் …
Read More »நேற்று மட்டும் இலங்கை கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று மட்டும் இலங்கை கடற்படையினர் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இலங்கையில் நேற்று (28) மட்டும் 31 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 21 பேர் கடற்படை வீரர்கள் என்பதுடன், 6 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் என்றும், நால்வர் இராணுவ வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை மொத்தமாக 222 கடற்படை வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயனுள்ள இணைப்புகள் …
Read More »கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்!
கொரோனா சந்தேகத்தில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்! பமுனுகம – தெலபுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சுகவீனமடைந்ததன் காரணமாக ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் …
Read More »இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றினால் 6வது நபர் உயிரிழப்பு தம்புளையில் சுவாசப்பிரச்சினை மற்றும் காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். நாவுல பிரதேச கிராம சேவர் மற்றும் சுகாதார பரிசோதகரின் தலையீட்டில் 1990 என்ற அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது குறித்த பெண் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய பெண்ணே நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தம்புளை வைத்தியசாலை வைத்தியர் பிரதிப் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த …
Read More »இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 159 ஆக அதிகரிப்பு இலங்கை கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியான 8 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுள் 3 பேர் யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எமது செய்திச் சேவையிடம் குறிப்பிட்டார். அவர்கள் அரியாலை பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் …
Read More »3 ஆயிரத்தை தாண்டும் அமெரிக்காவில் கொரோனா பலி
3 ஆயிரத்தை தாண்டும் அமெரிக்காவில் கொரோனா பலி அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,000-ஐ கடந்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று அங்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை …
Read More »கொரோனா சந்தேகத்தில் 29 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
கொரோனா சந்தேகத்தில் 29 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பு! கொழும்பு – பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் 29 சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கும் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதேவேளை, சிறுவர்களை வெளியில் விளையாட அனுமதிக்காமல் வீட்டிற்குள் …
Read More »நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா!
நான்கு மாத குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா! சிலாபம் நாத்தாண்டியா பகுதியில் நான்கு மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். சற்று முன்னர் இவர்களுக்கு கொரோனா தொற்று காணப்படுகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றினால் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் …
Read More »இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 109 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கமைய இன்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை …
Read More »