கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொது மக்கள் அடிப்படை வசதிகளற்ற மாதிரிக்கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்டு பல்வேறு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் இதுவரை அவற்றிற்கு எந்தவொரு தீட்வும் கிடைக்காத நிலையில் தொடர் கவனயீர்ப்பு …
Read More »போராட்டத்திற்கு உரிய தீர்வு இன்றேல் வீச்சு அதிகரிக்கும் : கேப்பாபுலவில் துரைராசா
சொந்த நிலங்களிற்கு செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தொடர் போராட்டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் போராட்டத்தின் வீச்சு அதிகரிக்கும் என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்களை நேற்றையதினம் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்றுடன் இருபத்தேழாவது நாளை எட்டியுள்ளது. 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் …
Read More »ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த நிலம் எமக்கு வேண்டும் – கேப்பாபுலவு மக்கள்
ஆறு தலைமுறைகளாக வாழ்ந்த நிலம் எமக்கு வேண்டும் – கேப்பாபுலவு மக்கள் காணிக்குள் கால் பதிக்கும் வரை தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளனர். அறுபது வருடங்களாக தாம் வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தமது பூர்விக நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி புதன்கிழமை முதலாம் திகதியிலிருந்து தொடர்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இந்தபோராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆறு தலைமுறையாக தாம் வாழ்ந்து …
Read More »கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது
கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் காலை 128 குடும்பங்களிற்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவத நாளாக மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More »கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன்
கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு காணிப்பிரச்சனைக்கு தீர்வு:சம்பந்தன் கேப்பாபுலவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சனைகளுக்கு எதிர்வரும் மார்ச் நான்காம் திகதி தாம் யாழ்ப்பாணம் செல்லுமுன்பாக முடிவுகாணப்படவேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொழும்பில் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று மாலை …
Read More »கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை
கேப்பாபுலவு காணி மீட்பு போராட்டம் : கொள்கையில் மாற்றமில்லை எமது உறவுகள் என்ற எண்ணம் இளைஞர்களுக்கு இருக்குமானால் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க கேப்பாபுலவில் 25 ஆம் திகதி ஒன்றுகூடுமாறு இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் இடம்பெற்றுவரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புலவுக்குடியிருப்பு இராணுவ முகாமிற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. விமானப்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் …
Read More »போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள்
போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் மக்கள் வேண்டுகோள் கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது. தீர்வின்றிய நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கும் தமக்கு அனைத்து தரப்பினரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு வழங்குமாறும், …
Read More »இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள் – அருட்தந்தை மங்களாராஜா
இழுத்தடிக்காது தீர்வை வழங்குங்கள் – அருட்தந்தை மங்களாராஜா கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு தொடர்ந்தும் யாழ் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் கோப்பபுலவு பிலவுக்குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களாராஜா தெரிவித்தார். 18 ஆவது நாளாக மக்களின் போராட்டம் தீர்வின்றி தொடரும் நிலையில் எதற்காக தொடர்ந்தும் அரசாங்கம் இழுத்தடிப்பு செய்கின்றது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். …
Read More »மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: டெனிஸ்வரன்
மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: டெனிஸ்வரன் கேப்பாபுலவு மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனிஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுப்பதற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை வடமாகாண அமைச்சர் பா. டெனிஸ்வரன் சந்தித்தார். கேப்பாபுலவு மக்களைச் சந்தித்து அமைச்சர் பா. டெனஸ்வரன் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களின் போராட்டம் …
Read More »தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம்
தீர்வின்றி 14 ஆவது நாளை எட்டியது கேப்பாபிலவு மக்களின் போராட்டம் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 14 ஆவது நாளை எட்டியுள்ளது. பிலவுக்குடியிருப்பில் விமானப்படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் தம்மை விடுவிக்குமாறு கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த 30 ஆம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்து, கிராமசேவகர், அழைத்தபோதும் …
Read More »