தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஜனாதிபதி நாளை கோருவார் …
Read More »