சஜித்தின் பேச்சால் கிளிநொச்சி மக்கள் பாரிய ஏமாற்றம் கிளிநொச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே பேசிய சஜித் புதிய ஐனநாயக முன்னணயின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது. மதியம் ஒரு மணிக்கு கிளிநொச்சிக்கு வருகை தந்த ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச, மக்கள் முன் ஆற்றிய தனது பிரச்சார உரையில் தான் ஐனாதிபதியாக வந்தால் […]
Tag: கிளிநொச்சி
கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்
கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து,இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்குபேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை மாத்திரமே தர்மபுரம் காவவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் இச்சம்பவத்தில் காவவல் துறை ஏனைய சந்தேக […]
கிளிநொச்சியில் தொடர்ந்தும் மின்வெட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக பகல் வேளைகளில் சுமார் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் இதுகுறித்து எவ்வித முன்னறிவித்தல்களும் வழங்கப்படுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். நீண்ட நேர மின்வெட்டு காரணமாக வர்த்தகர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில், மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். மேலும் 4 […]
கிளிநொச்சியில் வீழ்ச்சியடைந்த மீன்பிடி தொழில்
கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழச்சியடைந்தள்ளதாக திணைக்களத் தகல்களிலிருந்து அறியமுடிகின்றது. யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சுமார் 4,113 குடும்பங்களைச் சேர்ந்த 16,801 வரையான மீனவர்கள் கடற்தொழிலை வாழ்வாதாரத்தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் மீன்பிடியில் வீழச்சிநிலை ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் வாழ்வாதார […]
கிளிநொச்சியில் ரணிலின் அதிரடி உத்தரவு
வடக்கில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா நிதியுதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்து மேற்படி நிவாரண உதவித்தொகையை அதிகரிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். அத்துடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை உடனடியாக புனரமைக்க வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அவர் பணித்துள்ளார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு வார காலத்துக்கு தொடர்ந்து உலருணவுப் […]
கிளிநொச்சி விரையும் பிரதமர் ரணில்
கிளிநொச்சி முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கு செல்லவுள்ளதாக மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் மக்கள் பிரதமரை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கின்றனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் 12 வயது சிறுமிக்கு பிரசவம்! திகைத்துபோன மருத்துவர்கள்
மல்லாவியில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் அழைத்துவரப்பட்ட 12 வயது சிறுமி போகும் வழியிலே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது. பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் தாயும் சேயும் அனுமதிக்கபட்டனர்.இந்த 12 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த செய்தி மருத்துவர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாளை மற்றும் நாளை மறுநாள் வடமாகாணம் முழுவதும் மின் வெட்டு
அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வடமாகாணம் முழுவதிலும் எதிர்வரும் (14.07.2018, 15.07.2018 சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் […]
மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள்
கிளிநொச்சி, புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த சில பொது மக்கள் இன்று மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும் தங்களின் உள்ளுர் வீதிகள் அனைத்தும் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும் எனவே தாங்கள் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு தாம் மாட்டு வண்டியில் சென்று வாக்குகளை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைக்கு அருகில் சிசு மீட்பு
கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு அருகில் சிசுவொன்று மீட்கப்பட்டது. மருத்துவமனைக்கு அருகில் இன்று சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதன் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சிசுவை மீட்டு மருத்துவனையில் ஒப்படைத்துள்ளனர். தற்போது சிசு நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கைவிடப்பட்ட சிசுவின் தாயை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.





