Tag: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பேரெழுச்சியுடன் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட அறவழிப் போராட்டம் நேற்றுடன் 100ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும், இதுவரையில் அரசிடமிருந்து அவர்களுக்கு உருப்படியான பதில் ஏதும் வழங்கப்படவில்லை. அரசின் பராமுகத்தை – புறக்கணிப்பைக் கண்டித்து கிளிநொச்சியில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் காணாமல் […]

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? – வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கின்றது பேராதரவு!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வெளிப்படுத்தலையும், விடுதலையையும் வலியுறுத்தி தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஆகியன தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. அத்துடன், ஏனைய சகல தரப்புகளையும் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் அவை கோரியுள்ளன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கடந்த இரண்டு மாத காலத்துக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற […]

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளாக தொடர்கின்றது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக ஏ9 வீதியின் அருகில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் உணவுத்தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. […]