யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதை நான் கண்டிருக்கின்றேன் என யுத்தத்தின்போது கிளிநொச்சி மருத்துவமனையில் அரச மருந்தாளராக பணியாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண் ஜெனிவாவில் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற உபகுழுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, கிளிநொச்சி வைத்தியசாலையில், நான் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதை காணமுடிந்தது மருத்துவமனை மீதும் தாக்குதல்கள் […]





