ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன்இ தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது. கனடிய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை கனடா வரவேற்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடனான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளை […]





