Tag: கண்டி வன்முறை

கண்டி வன்முறை: மூன்று குழுக்கள் குறித்து தீவிர விசாரணை

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன், அரசியல் கட்சிகள் அடங்கிய 3 குழுக்கள் செயற்பட்டுள்ளமை தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் இலங்கை புலனாய்வுப் பிரிவினர் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போதும் இந்தக் குழுக்களைச் சேர்ந்த பலர் கைதாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய சில அரசியல் கட்சிகளும் இந்தக் குழுக்களுடன் இணைந்து செயற்பட்டிருப்பதாக புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கண்டி வன்முறை யார் காரணம்? – எதிர்க்கட்சித் தலைவர்

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரே கண்டி திகன சம்பவம் வன்முறையாகவும் கலவரமாகவும் மாற பிரதான காரணம் எனவும் அவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டு இந்த தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கண்டி, தெல்தெனிய சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை […]