Tag: கண்டி – திகன

வன்முறையை தொடரவிடக்கூடாது ; வேலு குமார் எம்.பி. வேண்டுகோள்

கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு அரசின் அசமந்த செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதில் தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னின்று செயற்பட்டு இருக்கின்றார்கள். அதன்மூலம் அவர்கள் எதிர்பார்த்தது சக வாழ்வையும், சமாதானத்தையும் ஆகும். இன்று […]

கண்டி கலவரத்தின் பின்புலத்தில் அமெரிக்கா : எதிரணி சந்தேகம்

கண்டி – திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் பின்புலத்தில் அரச தரப்பும், அமெரிக்க இராஜாங்க திணைக்களமுமே இருக்க கூடுமென பொது எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிரணி கைவிடவில்லை. கட்டாயம் அந்தப் பிரேரணை கொண்டுவரப்படும். ஐ.தே.கவின் […]

திகனயில் பதற்றம் : ஊரடங்கு சட்டம் அமுல் : பொலிஸார் களத்தில்

கண்டி – திகன தெல்தெனிய பிரதேசத்தில் தற்போது விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த நபர்இ நேற்றுமுன்தினம் மரணமடைந்தார். இதில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவரின் உடல் இன்று பிற்பகல் வேளையில் இறுதிக் கிரியைகளுக்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதனால் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்பாடமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளைஇ […]