கட்டுநாயக்க விமான நிலையத்தை மூட ஜனாதிபதி உத்தரவு! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை உடன் மூடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு பிரிவுடன் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய இன்று முதல் இரண்டு வாரங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் எந்தவொரு விமானங்களையும் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இத்தாலியில் கொரோனா …
Read More »கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட அதிரடிப்படை – 60 பேர் கைது கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு சில தரப்பினர் தொடர்ந்து சிரமங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துபவர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்கானித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த வாரங்களில் பயணிகளுக்கு அழுத்தம் பிரயோகித்த 60 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் …
Read More »கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர்(Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணித்தியலாத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும். இதே போன்று பயணிகள் செல்லும் பொழுதும் விமான நிலையத்திற்கு வரும் பொழுதும் அவர்களது உறவினர்கள் நண்பர்களை …
Read More »வெளிநாட்டிலிருந்து வந்த பலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த 9 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பெறுமதி 4 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகளினால் குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் அடங்குகின்றனர். வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 23 …
Read More »கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது.!
இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று நண்பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். 35 வயதான குறித்த சந்தேகநபர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏசியா எயார்லைன்சுக்கு சொந்தமான எ.கெ 043 என்ற விமானத்தில் மலேசியா கோலாலம்பூரியில் இருந்து வருகை தந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரின் பயணப் பொதியில் இருந்து 355 கிராம் …
Read More »