கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலையடுத்து, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியாக அனைத்து பாடசாலைகளும் கடந்த 22ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டிருந்தன. அதனைத்தொடர்ந்து முப்படையினர், விசேட அதிரடிப் படையினர், பொலிஸார் இணைந்து தொடர்ச்சியாக இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தரம் 6 இற்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கு நாளை (திங்கட்கிழமை) இரண்டாம் தவனைக் கல்வி நடவடிக்கைகள் […]





