முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த ஆண்டு தர்மயுத்தம் என்ற பெயரில் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த தர்மயுத்தம் தொடங்குவதற்கு முன்னர் தன்னை அவர் சந்தித்ததாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தவுடன், தன்னை சந்திக்க வேண்டும் என்று ஒரு நண்பர் மூலம் தூது […]
Tag: ஓபிஎஸ்
ரஜினியையும் கமல்ஹாசனையும் வண்ண பலூன்களுடன் ஓப்பிட்ட ஓபிஎஸ்
அரசியில் வானில் அரிதாரம் பூசிய புதிய வண்ண பலூன்கள் விரைவிலேயே வெடித்து சிதறும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 7 அடி வெண்கல சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று காலை 11.10 மணியளவில் திறந்து வைத்தனர். மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற நாளிதழும் வெளியிடப்பட்டது. […]
மோடி பேச்சை கேட்டால் பூஜய்ம் தான் பரிசாக கிடைக்கும்
பிரதமர் மோடி கூறியதால்தான் மீண்டும் அதிமுகவில் இணணந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்தது உண்மை என்று ஓபிஎஸ் மூலம் தெரிய வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: மோடியின் பேச்சை கேட்க வேண்டாம், அதிமுக பிரச்சனைகளை நாமே பேசி தீர்த்து கொள்ளலாம் என்று […]
சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும்
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இருந்தே சசிகலா தலைமையிலான அணிக்கே ஆதரவு கொடுத்து வரும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி, தற்போது சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, ‘திமுக ஒரு தேச விரோத, இந்து விரோத கட்சி என்றும், நாட்டை பிரிப்பதற்காக முயற்சி எடுத்த கட்சி என்றும் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். எனவே அதிமுக ஒன்றிணைந்து […]
கமலும் ரஜினியும் சோளக்காட்டு பொம்மைகள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் அரசியல் களத்தில் புதிய கட்சியுடன் களமிறங்கவுள்ளனர். மேலும் விஷால் மற்றும் விஜய் எந்த நேரமும் களமிறங்க காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி பாக்யராஜ் உள்பட இன்னும் ஒருசிலரும் அரசியலில் நுழைய சரியான நேரத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த நிலையில் ஒருசிலர் புதிய கட்சி தொடங்குகின்றனர் என யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் சோளக்காட்டு பொம்மைகள் […]
சட்டப்பேரவைக்கு வருவாரா கருணாநிதி?
மூத்த அரசியல்வாதியும், திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை காரணமாக அவரால் சட்டசபைக்கும் சரி அரசியல் நிகழ்வுகளிலும் சரி கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடருக்கும் கருணாநிதி செல்லவில்லை. அவரது வருகையை எதிர்நோக்கி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சரியாக பிராத்தனை செய்வதாகவும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார். நேற்று தமிழக சட்டசபையில் […]
எடப்பாடி – தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜக?
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுகவில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு, எடப்பாடி-ஓபிஎஸ் ஆகியோரை கையில் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க திட்டம் தீட்டியது. அதற்காகவே, இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு, அதன் பின் அது எடப்பாடி-ஓபிஎஸ் அணிக்கு வழங்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எப்படியும் அதிமுகவே வெற்றி […]
தினகரனின் மனதை மாற்றிய ஆர்.கே.நகர் வெற்றி
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி டிடிவி தினகரனின் எண்ண ஓட்டங்களை மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40, 707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதேபோல், திமுக வேட்பாளர் மதுசூதனன் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததோடு டெபாசிட் இழந்துள்ளார். அந்நிலையில், வெற்றி பெற்ற தினகனுக்கு, நேற்று காலை […]
சின்னத்தால் சின்னாபின்னமான இரு பிரிவுகள் …மாற்றி மாற்றி மரண கலாய்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவுக்கும், அதிமுக அம்மா கட்சிக்கும் அல்லது திமுகவுக்கும் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் கூட இவ்வளவு போட்டி இல்லை, ஆனால் அதிமுக அம்மா கட்சிக்கும், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சிக்கும் நடுவே பெரும் ரகளை ஓடிக் கொண்டுள்ளது. ஜெயிக்கிறோமோ இல்லையோ முடிந்த அளவுக்கு ஒரு தரப்பை இன்னொரு தரப்பு அசிங்கப்படுத்தி பிரசாரம் செய்ய வேண்டும் என்பதில் டிடிவி தினகரன் மற்றும் மதுசூதனன் தரப்பு […]
ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வீதிவீதியாக தீவிர பிரச்சாரம்
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் ஆர்.கே.நகர் தொகுதியில் தன்னுடைய வெற்றி இருக்கும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி.தினகரன் மூன்றாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக […]





