வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸ்க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரணைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து …
Read More »அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் கிழக்கு விஜயம்
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் நாயகம் ஜெஃப்ரி டேவிட் ஃபெல்ட்மென் (Jeffrey David Feltman) கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போபொல்லாகமவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து கிழக்கு முதல்வர் நஸீர் அஹமட்டைச் சந்தித்து, கிழக்கின் தற்போதைய நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்தோடு, கிழக்கின் சிவில் சமூக அமைப்பினரையும் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளது.
Read More »