Friday , November 22 2024
Home / Tag Archives: ஐக்கிய நாடுகள் சபை

Tag Archives: ஐக்கிய நாடுகள் சபை

நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது

நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப் பின்பற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் உஸ் தெரிவித்துள்ளார்.

Read More »

ஐ.நாவை பகைத்துக்கொண்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் : ராஜித எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளை பாதுகாக்கும் அனைத்து உடன்படிக்கைகளிலும் நாம் கைச்சாத்திட்டுள்ளோம். ஐ.நாவின் விசேட நிபுணர்கள் இங்கு வரும் போது அவர்களுக்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது கட்டாயனமானது. ஐ.நாவை பகைத்துகொண்டு எம்மால் சர்வதேசத்தில் செயற்பட முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஐ.நாவின் சிறப்பு நிபுணர் இலங்கை குறித்து தெரிவித்த கருத்துகள் …

Read More »

ஐ.நா.வின் விசேட பிரதிநிதியுடன் வவுனியா நீதிபதிகள் நாளை சந்திப்பு !

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விசேட பிரதிநிதி பென் அமர்சன் வவுனியாவில் நீதிபதிகளை நாளை (புதன்கிழமை) சந்திக்கவுள்ளார். இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் பிரதம நீதியரசரின் பணிப்புரைக்கமைய நாளை (புதன்கிழமை) வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட நீதிபதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இக் கலந்துரையாடல் …

Read More »

விரைவில் அணு குண்டு சோதனை – அமெரிக்காவுக்கு வட கொரியா மிரட்டல்

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறிய வகையில் விரைவில் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக வட கொரியா மிரட்டியுள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து …

Read More »

கால அவகாசம்; ஸ்ரீலங்காவை பாதுகாப்பதற்காகவே- சுரேஸ்

ஐக்கிய நாடுகள் சபை 2 வருட கால அவகாசத்தைக் கொடுத்திருப்பது, ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கமாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்காவிற்கு கால அவகாசத்தை வழங்குவதன் ஊடாக தமிழரசுக் கட்சி எதனைச் சாதிக்கப் போகின்றது என்றும் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஜெனீவா அமர்வு குறித்த …

Read More »

(திருத்தம்) உலகின் முதலாவது மகிழ்ச்சியான நாடக நோர்வே தெரிவு!

(திருத்தம்) உலகின் முதலாவது மகிழ்ச்சியான நாடக நோர்வே தெரிவு

(திருத்தம்) உலகின் முதலாவது மகிழ்ச்சியான நாடக நோர்வே தெரிவு! ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் பிணையம் தனது 2017 ஆம் ஆண்டின் அறிக்கையை போன புதன்கிழமை வெளியிட்டது.அதன்படி உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் நோர்வே முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்டது. புதிய பட்டியலின் படி நோர்வே முதலாவது இடத்தையும் டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து இரண்டாம் மூன்றாம் இடத்தையும் சுவிச்சர்லாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன. 157 நாடுகளில் நடத்திய ஆய்வின்படி,மக்கள் …

Read More »

வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு

வரைவுத் தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பிப்பு ஸ்ரீலங்கா தொடர்பான வரைவுத் தீர்மானம் இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், பொறுப்புகூறல் மற்றும் மனித உரிமைகள் என தலைப்பிடப்பட்டு இந்த வரைப்புத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மொண்டிநீக்ரோ, மசடோனியா, பிரித்தானியா, வட அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், இந்த தீர்மானத்திற்கு பிரதானமாக அனுரணை வழங்கும் நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் …

Read More »

கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கிறது

கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மை

கால அவகாசம் ஐ.நாவின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கிறது ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்படுவது தற்போது உறுதியாகியுள்ள நிலையில், சர்வதேசத்தின் இந்த நகர்வானது ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுப்பதாக அமைந்திருப்பதாக தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் தொழிற் சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளார்கள். இது குறித்து ஐ.நா மனித உரிமை பேரவைக்கு போரினால் …

Read More »

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் – வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சுக்கு இடமில்லை

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை - ஹர்ச டி சில்வா

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் – வெளிநாட்டு நீதிபதிகள் என்ற பேச்சுக்கு இடமில்லை ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பாக 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் கீழான 30/1க்கு உட்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அப்பொழுது சமர்ப்பித்த அனுசரணை நாடுகள் இந்த கால அவகாசத்திற்கு உடன்பட்டிருப்பதாக பதில் வெளிநாட்டலுவல்கள் …

Read More »

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு

சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு அவசியம் : ஐ.நா குழு பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது. விசாரணைகளின் சுயாதீனம் மற்றும் பக்கசார்பின்மையை உறுதிப்படுத்த சர்வதேச பங்களிப்பு அவசியம் என குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது. சிறிலங்கா தொடர்பாக பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு …

Read More »