ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட்டாலே போதும், அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் பெற்றுத்தருவோம். அரசியல் தீர்வு விடயத்தில் மைத்திரி -மஹிந்த கூறுவதையே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியிடம் விலை போயுள்ளார் ஒரு சிலர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவரையும் தவறாக வழிநடத்தி […]
Tag: ஐக்கிய தேசிய கட்சி
ஐ.தே.க.யிலிருந்து 20 பேர் கட்சி தாவுவது உறுதி
மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20 பேர் விரைவில் இணைந்து கொள்ளவுள்ளதாக வனப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தாம் தற்பொழுது அந்த 20 பேருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் மிகவும் பொறுப்புடன் இந்தக் கருத்தைக் கூறுகின்றேன். தற்பொழுதும் தனது வாகனத்தில் […]
விஜயதாசவுக்கு எதிராக 70 பேர் கையொப்பம்?
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையிலாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் விஜேதாச ராஜபக்ஷ தொடர்பான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், குறித்த பிரேரணையில் 70 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாளை நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டமானது மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய வலியுறுத்தப்படுவார் எனவும் […]





