Tag: எஸ்.பி. திஸாநாயக்க

நவம்பர் 18 பிரதமர்

நவம்பர் 18 பிரதமர் யார் ?

நவம்பர் 18 பிரதமர் யார் ? ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்த நாள் தானும் அமைச்சராகுவேன் என்று எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார். இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும், தற்போதுள்ள அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கருத்துக்களும் பொதுமக்கள் மத்தியில் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன, மேலும் சிலர் அந்த கருத்துக்களை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாக இது தொடர்பான சட்ட நிலையை […]

ராஜிதவுக்கு எதிரான பிரேரணையை சு.க. கடுமையாக எதிர்க்கும்! – எஸ்.பி. திட்டவட்டம்

“சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது”  என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 15 காரணங்களை உள்ளடக்கி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை பொது எதிரணி கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்திருந்தது. அதற்குப் பதிலளித்திருந்த ராஜித சேனாரத்ன, ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல 100 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் தனது […]

புதிய அரசமைப்பு அறவே வேண்டாம்! – நடவடிக்கைளை உடனே நிறுத்தக் கோருகிறார் எஸ்.பி. 

“புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை இந்த அரசுக்கு இல்லை. மக்கள் ஆணை இல்லாத ஒரு செயலை எம்மால் செய்யமுடியாது. ஆகவே, புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியை இத்தோடு நிறுத்திக்கொள்வதுதான் நல்லது.” – இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவருவதற்கான ஆணையை ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்  கட்சியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரின. ஆனால், எந்தக் […]

பொதுபலசேனாவை இன்றும் கோட்டாவே இயக்குகின்றார்! – அமைச்சர் எஸ்.பி. குற்றச்சாட்டு

“பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாலூட்டி வளர்த்த கோட்டாபய ராஜபக்ஷவே இன்றும் அந்த அமைப்புக்குப் பாதுகாப்பு வழங்கி வருகின்றார்” என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இனவாத, மதவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் குழுக்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுபலசேனா அமைப்புக்கு அன்று பாதுகாப்பு வழங்கி அந்த அமைப்பை வளர்த்தெடுத்தவர் முன்னாள் பாதுகாப்புச் […]

பிரதமரின் தீர்மானங்களால் அதிர்ச்சியில் ஜனாதிபதி மைத்திரி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியில் உள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அண்மையில் நடத்தப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின்போது சில முக்கிய தீர்மானங்களை பிரதமரே எடுத்திருப்பதாகவும், அதனால் ஜனாதிபதி அதிருப்தியடைந்திருப்பார் என தாம் நினைப்பதாகவும் அவர் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் […]

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

சைட்டம் பல்கலையை நிராகரிக்க மருத்துவப் பேரவை யார்?

சைட்டம் பல்கலையை நிராகரிக்க மருத்துவப் பேரவை யார்? எந்தவித அடிப்படை காரணங்களும் இன்றியே மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகப் பட்டப்பட்டிப்பினை ஏற்பதற்கு ஸ்ரீலங்கா மருத்துவப் பேரவை சிலருடன் சேர்ந்து நிராகரித்து வந்ததாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அரச வைத்தியசாலைகளில் மாலம்பே பல்கலைக்கழக மாணவர்களுக்கு பயிற்சிபெற அனுமதியளிக்காமல் அந்த மாணவர்களை மருத்துவர்களாக ஏற்றுக்கொள்ள தகுதியில்லை என்று மருத்துவப் பேரவை கூறுவது பிழையான செயற்பாடாகும் என்றும் அமைச்சர் கண்டித்தார். […]