“வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்று வடக்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “போர் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்களில் நூற்றுக்கொருவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தை முன்னிட்டு, ஓகஸ்ட் 30 ஆம் திகதி புதன்கிழமை வவுனியாவில் பெரும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவை பிரதானப்படுத்தி முல்லைத்தீவு மாவட்ட …
Read More »ரெலோவின் அடுத்த அமைச்சர் யார்? இன்றுதான் முடிவு அறிவிப்பு! – செல்வம் தெரிவிப்பு
“எமது கட்சியின் சார்பில் யாரை அமைச்சராக நியமிப்பது என்பது குறித்து இன்றுதான் நாம் முடிவை அறிவிப்போம்.” – இவ்வாறு ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் பெயரை, கட்சியின் செயலாளர் ந.சிறீகாந்தா முதலமைச்சருக்கு எழுத்துமூலமாக நேற்று அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “எமது கட்சியின் சார்பில் அமைச்சராக யாரை நியமிப்பது …
Read More »டெனீஸ்வரனுக்குப் பதிலாக விந்தனா? சிவாஜிலிங்கமா? – ரெலோவுக்குள் குழப்பம்
வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்குப் பதிலாக ரெலோவின் சார்பில் அமைச்சரவைக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தை நியமிப்பதற்கு அந்தக் கட்சிக்குள்ளேயேஎதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் அந்தக் கட்சியினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோவின் சார்பில், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய பா.டெனீஸ்வரன் 2013ஆம் ஆண்டு போக்குவரத்து, மீன்பிடி, வர்த்தக வாணிப, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார். வடக்கு மாகாண சபையில் அண்மையில் எழுந்த சர்ச்சையில், …
Read More »அமைச்சு பதவியை நிராகரித்த சிவாஜிலிங்கம்
வடக்கு மாகாண அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை நிராகரித்ததாக மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 14ஆம் திகதிக்கு முன்னதாகவே முதலமைச்சர் என்னை அழைத்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்க முடியுமா என கேட்டிருந்தார். ஆனால் அந்த கோரிக்கைக்கு நான் நிராகரித்துள்ளேன். நான் …
Read More »அரசாங்கத்திற்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படும்: சிவாஜிலிங்கம்
வடக்கு கிழக்கிற்கு வரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவர் என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வலி. வடக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அந்த வாக்குறுதி வழங்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதத்துடன் …
Read More »சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை கிழித்தெறிந்த தவநாதன்
சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை கிழித்தெறிந்த தவநாதன் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்தள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தகோரி கடந்த 86 ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்தார். எனினும் இந்த விடயத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சி கூட்டத்தில் பேசியதன் பின்னர் 14 ஆம் திகதி விசேட அமர்வை நடத்தி …
Read More »சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன?
சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொலை முயற்சி தொடர்பில் யார் யார்? கைது செய்யப்பட்டார்கள், என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். சுமந்திரனின் கொலை முயற்சி குறித்த உண்மை நிலைமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ, யாரரேனும் நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் …
Read More »தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை ஸ்ரீலங்காவில் நல்லாட்சி ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் மீதான மோசமான திணிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பெப்ரவரி 4 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவின் தேசியக் கொடியை …
Read More »