உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது என இலங்கையின் சிரேஷ்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞான ரீதியில் இந்தக் கூற்று எந்த விதத்திலும் அடிப்படையற்றது என்றும் கூறியுள்ளனர். இலங்கை வைத்தியர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. இலங்கையின் 134 சிரேஷ்ட மருத்துவ நிபுணர்களின் கையொப்பத்தில் வெளியான அறிக்கை இங்கு வெளிடப்பட்டது. […]





