மீகஹத்தேன பொலிஸ் பிரிவில் உள்ள உணவகம் ஒன்றின் மீது நேற்றைய தினம் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், குண்டு வெடிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தின் போது, உணவக உரிமையாளரும், பணியாளர் ஒருவரும் மட்டுமே அங்கிருந்துள்ளனர். அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் , வெடிக்காத கைக்குண்டை மீட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.





