மின்னல் தாக்கியதில் இளைஞர் பலி! மின்னல் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமினியாவ வாவிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 17 வயதுடைய மரதன்கடவல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கெக்கிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »