தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது இந்தியாவிடம் எடுத்துரைத்தது இ.தொ.க. புதிய அரசியலமைப்பை விட தேர்தல் முறை மாற்றமே மலையக மக்களிடையே அதிக தாக்கத்தை செலுத்துமென்றும் ஆகவே தமிழ் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் முறை மாற்றம் இடம்பெறவேண்டுமென்பதை இலங்கைக்கு இந்தியா எடுத்துரைக்க வேண்டுமெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரை கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்த இ.தொ.க. இக்கோரிக்கையை முன்வைத்தது. […]





