கடந்த நாற்பத்தெட்டு மணிநேரங்களில் இடம்பெற்ற கலவரத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. பலர் படுகாயமடைந்திருப்பதுடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரத்தில் ஏராளமான மக்களின் வீடுகளும் வியாபார நிலையங்களும் வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக ஸ்தலத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை இராணுவத்தினரின் தாக்குதலில் சில குண்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எவ்வாறாயினும் குறித்த பகுதிகளில் ஊராடங்கு தொடர்ந்தும் அமுலில் […]
Tag: இலங்கையில்
இலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்!
இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், மற்றும் ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் பலியானார்கள். இன்னும் இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் கத்தோலிக்க சபையின் கீழ் செயல்படும் அனைத்து தேவாலயங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 160 தற்கொலை குண்டுதாரிகள் பதுங்கியுள்ளனர்??
இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாகவும் அதில் தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளடங்குவதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பயிற்சி பெற்றுக் கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாக பாதுகாப்புப் பேரவைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் விசாரணைகள் மிகவும் மந்த கதியில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தீவிரவாத பயிற்சி பெற்றுக் கொண்டவர்களில் குறிப்பிடத்தக்களவானவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீவிரவாதிகளை கைது செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு, காவல்துறை திணைக்களம் […]
இலங்கையில் பர்தா போட்டு ரகசியமாக உலாவிய மர்மநபர்!
சற்று முன் வத்தளையில் பர்தா அணிந்து கொண்டு மர்மநபர் ஒருவர் வீதியில் சந்தேகித்திடமாக உலாவி வந்துள்ளார். பின் அவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மக்கள் அந்த மர்மநபரை அழைத்து அவரை விசாரித்துள்ளனர். ஆனால் அவர் முன்னும் பின்னும் முரணாக பதலளித்துள்ளார் எனவே மக்கள் அவரின் பர்தாவை விலக்கி பார்த்ததில் அதில் ஆண் உருவத்தை கண்டு மக்கள் அதிர்ச்சி ஆகியுள்ளனர். பின் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை!
இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள two stroke இயந்திரங்களை முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்றுக் அழிக்கவுள்ளது. அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள வழங்க […]
இலங்கையில் சில பிரதேங்களில் இடம்பெற்ற நிலநடுக்கம்!
மலையகத்தின் சில பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இன்று காலை 8.15 – 8.20 மணிக்கு இடைப்பட்ட பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி இயக்குனர் உதய குமார தெரிவித்துள்ளார். அதற்கமைய பதுளை, ஹாலிஎல, பசறை, வெலிமடை, நுவரெலியா ஆகிய பகுதிகளில் சிறு அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதாக நிலையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தீவிர கவனம் செலுத்தி […]





