இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே செல்கின்றதெனவும், இவ்விடயத்தில் அரசாங்கம் அதிக கவனஞ்செலுத்துவது அவசியம் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியுடனான சந்திப்பின்போது, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டுங்–லாய் மார்க் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக காணாமல் போனோர் குறித்த அலுவலத்தை நிறுவுதல் உள்ளிட்ட நேரடி செயற்பாடுகளைக்கூட இலங்கை அரசாங்கம் செயற்படுத்த தவறியுள்ளதென டுங்–லாய் மார்க் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய […]





