Tag: இலங்கை

இலங்கை திரும்பும் அகதிகள்! யாழ் உள்ளிட்ட பகுதிகளில் குடியேற்ற நடவடிக்கை

தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் ஈழத் தமிழர்களின் 24 குடும்பங்கள் இலங்கைத் திரும்பவுள்ளனர்.நாளையும், எதிர்வரும் 28ம் திகதியும் குறித்த அகதிகள் இலங்கைத் திரும்பவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் உதவியுடன் அவர்கள் நாடு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விசேட விமான சேவைகளின் ஊடாக குறித்த இரண்டு தினங்களிலும், 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் நாடு திரும்பவுள்ளனர். தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் […]

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான தடயவியல் கணக்காய்வை எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அடுத்த வாரமளவில் தடயவியல் கணக்காய்வை நடாத்தும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என, இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீடு குறித்து, 5 தடயவியல் கணக்காய்வுகளை […]

இலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை!

இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டிலுள்ள two stroke இயந்திரங்களை முச்சக்கர வண்டிகளை உரிமையாளர்களிடமிருந்து அரசாங்கம் மீளவும் பெற்றுக் அழிக்கவுள்ளது. அல்லது பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு மீள் சூழற்சி மேற்கொள்ள வழங்க […]

Maithripala Sirisena

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான வரப்பிரசாதம் : தடுத்து நிறுத்திய மைத்திரி!!

சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான வரியை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான வரியை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர யோசனை முன்வைத்திருந்தார். இவ்வாறு வரியை தளர்த்துவதன் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளவர்கள், இலங்கையில் உள்ள தங்கது உறவுகளுடன் குறைந்த செலவில் பேச முடியும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் […]

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை கோரும் அமெரிக்கா!

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே, இந்த தொகையினை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் ஆகியவற்றுக்கு 40 பில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்யுமாறு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதில், […]

இலங்கையில் 54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

இலங்கையின் பொலிஸ் துறையில் கடமையாற்றும் 54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் குறித்த இடமாற்றத்திற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, குறித்த இடமாற்றம் கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டு மறுதினம் இரத்து செய்திருந்த நிலையில் மீண்டும் சில திருத்தங்களுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் பெண்களுக்காக அறிமுகமாகும் புதிய சேவை!

இலங்கையில் பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான 25 முதல் 30 பஸ்களை ஈடுபடுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பஸ் சேவையானது, தெரிவுசெய்யப்பட்ட நகரங்களிலும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து […]

இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை அரசுக்கு இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் […]

இலங்கையில் சிறந்த தலைமைத்துவம் இல்லை!

நாட்டில் தற்போது சிறந்த தலைமைத்துவம் இல்லை என்று தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், கடந்த காலங்களைவிட நாட்டில் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற வெளிச்சம் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் நிலவிய யுத்தத்தை எக்காலத்திலும் நிறைவுக்குக் கொண்டுவர முடியாது என்றும் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது என்றும் கூறினார்கள். […]

கோத்தபாய ராஜபக்

இலங்கை சர்வதேச முதலீடுகளை இழக்கின்றது

உறுதியற்ற அரசியல் செயற்பாடுகளால் இலங்கை அரசாங்கம் பல முதலீடுகளை இழந்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கம்பஹாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எலிய அமைப்பின் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கையால் புதிதாக நேரடி முதலீட்டு வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. இதற்கு இங்கு காணப்படும் அரசியல் ஸ்திரமற்ற தன்மையே […]