Tag: இரட்டை இலை

ஜெ.வின் நினைவு மண்டபத்தில் இரட்டை இலை?

மக்கள் வரிப்பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு மண்டபத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று இந்த நினைவிடம் […]

இரட்டை இலை சின்னம் எடப்பாடி – ஓபிஎஸ் அணிக்கே – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இரட்டை இலை சின்னம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து வந்தது. இரட்டை இலை கிடைக்கும் அணிக்கே தேர்தலில் […]

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு – டி.டி.வி.தினகரன் டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம்

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் இன்று டெல்லி குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை தலைமை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் இரட்டை இலை சின்னம் இருந்தால்தான் அதிக வெற்றியை பெற முடியும் என்று அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். இந்த நிலையில் […]

தினகரனிடம் இரட்டை இலை லஞ்சம் விசாரணை நடத்த டெல்லி போலீசார் சென்னை வருகை

தினகரனிடம் விசாரணை நடத்த நாளை டெல்லி போலீசார் சென்னை வருகிறார்கள்.ஏசிபி சஞ்சய் ராவத் போலீஸ் அதிகாரி தலைமையில், விசாரணை நடைபெறுகிறது ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது. அ.தி.மு.க. அம்மா அணி என்று சசிகலா தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு சமீபத்தில் […]

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஜெயலலிதா மரணம் அடைந்ததால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு ஏப்ரல் 12–ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்? என்ற கேள்வி […]

ஓ.பி.எஸ்.சை மீண்டும் முதல்வராக்குவோம்: மதுசூதனன் உறுதி

ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஆர்.கே. நகர் தொகுத்திக்கான இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் – ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என […]