மேஷம்: காலை 8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமை கூடும். தள்ளிப் போன விஷயங் கள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: காலை 8.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங் களுக்கும், கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். […]





